#LocalBodyElection:திமுகவின் சென்னை மேயர் வேட்பாளர் யார்?..!
சென்னை மாநகராட்சியில் மேயர் பதவிக்கு போட்டியிட திமுக சார்பில் பட்டியலினத்தை சேர்ந்த 16 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது.இதனையடுத்து,பிப்.22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கடையில்,தொகுதி பங்கீடு,தேர்தல் பரப்புரை உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில்,சென்னையில் மொத்தம் 200 வார்டுகள் உள்ள நிலையில் அதில் 165 வார்டுகளில் திமுக போட்டியிடுகிறது.குறிப்பாக,திமுக சார்பில் சென்னை மாநகராட்சியில் மேயர் பதவி பட்டியலின பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி,சென்னை மாநகராட்சியில் மேயர் பதவிக்கு போட்டியிட திமுக சார்பில் பட்டியலினத்தை சேர்ந்த 16 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அந்த வகையில்,வடசென்னை பகுதியில் இருந்து மேயர் பதவிக்கு கவிதா நாராயணன் என்ற பெண் போட்டியிடுவார் என்று தெரிகிறது.
குறிப்பாக,முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் 7 வார்டுகள் உள்ள நிலையில்,அதில் 70 வார்டில் போட்டியிட பட்டியலினத்தை சேர்ந்த சிரிதனி என்ற எம்பிஏ பட்டதாரியின் பெயர் தேர்வு செய்யப்படயிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.எனினும்,இவர்களின் பெயர் அதிகாரப்பூர்வமாக இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.