உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுக்களை பூட்டை உடைத்து திருட முயற்சி..!
- உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுக்களை திருட முயற்சி நடைபெற்றுள்ளது.
- வேட்பு மனுக்கள் திருடும் முயற்சியானது திருவாரூர் அருகே அரங்கேறி உள்ளது.காவல்துறை விசாரணையில் இறங்கியுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 தேதி என இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.இதற்கான வேட்பு மனுக்களை அந்த பதவிக்கு வேட்பாளர்கள் தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவாரூர் அருகே வடகண்டம் ஊராட்சி மன்ற அலுவலக பூட்டை உடைத்து ஆவணங்களை திருட முயற்சி நடந்துள்ளது.திருவாரூர் அருகே வடகண்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளனர்.இந்த உடைப்பு சம்பவம் ஆனது ஊராட்சி அலுவலகத்தில் வைத்திருந்த உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுக்களை திருட முயற்சியா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.