#BREAKING : 3 ஒன்றியத்தில் தபால் வாக்குகள் செல்லாதவை என அறிவிப்பு..!
- இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தலின் வாக்குகளை 315 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.
- முறையான ஆவணங்கள் தாக்கல் செய்யவில்லை என கூறி 3 ஒன்றியங்களில் செல்லாத தபால் வாக்குகள் அறிவிக்கப்பட்டு உள்ளது .
சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மீதமுள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 97 ஆயிரத்து 975 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில் 76.19 சதவீதமும் , இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
சுமார் 25 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளை 315 மையங்களில் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.இந்நிலையில் 3 ஒன்றியங்களில் செல்லாத தபால் வாக்குகள் அறிவிக்கப்பட்டு உள்ளது .
அதன் படி தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியத்தில் 135 தபால் வாக்குகளில் 85 வாக்குகளும் ,சிவகங்கை மாவட்ட திருப்புவனம் ஒன்றியத்தில் 60 வாக்குகளில் 58 வாக்குகளும்,நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம்118 வாக்குகளில் 96 வாக்குகளும் செல்லாத தபால் வாக்குகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தபால் வாக்குகளுக்கு முறையான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என கூறி அதிகாரிகள் தபால் வாக்குகளை நிராகரித்து உள்ளனர்.