குடமுழுக்கு திருவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.!

Default Image
  • தஞ்சை பெரிய கோவிலில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5-ம் தேதி குடமுழுக்கு திருவிழா நடைபெற இருக்கின்றது.
  • அதனால் மக்களின் கூட்டம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதால் தஞ்சை மாவட்டத்திற்கு வரும் பிப்ரவரி மாதம் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டது.

தஞ்சையை ஆட்சி செய்த ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலமாகவும் இருக்கும் பெரிய கோவிலில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5-ம் தேதி குடமுழுக்கு திருவிழா நடைபெற இருக்கின்றது.

இதற்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மக்களின் கூட்டம் தஞ்சையில் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதால் தஞ்சை மாவட்டத்திற்கு வருகின்ற பிப்ரவரி மாதம் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவித்த மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் உத்தரவிட்டுள்ளார். மேலும், விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், பிப்ரவரி 22-ம் தேதி பணி நாளாக செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
muthu ,meena (4) (1)
Suburban Railway - MTC Chennai
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth