குமரி மாவட்டத்தில் பிப்.6ல் உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு
தக்கலை தர்கா ஆண்டு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பிப்ரவரி 6-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
தக்கலை செய்கு பீர்முஹம்மது ஹாகிபு ஒலியுல்லா (ரலி) ஆண்டுவிழாவை முன்னிட்டு பிப்ரவரி 6-ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்று கன்னியாகுமரி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார். அதன்படி, பிப்ரவரி 6-ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
பிப்ரவரி 6-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள உள்ளுர் விடுமுறைக்கு ஈடும் செய்யும் வகையில் 2023 மார்ச்சி திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (11.03.2023) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.