நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் உத்தரவு.
படுகர் சமுதாய மக்களின் ஹெத்தை அம்மன் திருவிழாவையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள கோயில் படுகர் சமுதாய மக்களின் குல தெய்வமாக கருதப்படுகிறது.
ஆண்டுதோறும் ஹெத்தையம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு செங்கோல் நாட்டுதல் விழாவுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான நாளை ஹெத்தையம்மன் உலா நடைபெறவுள்ளது.
இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் , பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில் ஜன.8ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…