#BREAKING: தென்காசி மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை..!
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். முக்கிய தேர்வுகள் நடைபெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜன் அறிவித்துள்ளார். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்க்கது.