சென்னை மாவட்டத்தில் வரும் 31-ம் தேதி உள்ளூர் விடுமுறை- மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி!
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் வரும் 31- ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என அம்மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நடைபெறுவது போல, கேரளாவில் ஜாதி, மத வேறுபாடின்று ஆண்டுதவாறது கொண்டாடப்படும் பண்டிகை, ஓணம். ஆகஸ்ட் 22- ம் தேதி தொடங்கி, அடுத்த பத்து நாள்களுமே ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால், ஓணம் பண்டிகையை வீட்டிலிருந்தே கொண்டாட வேண்டும் எனவும், பொது இடங்களில் ஓணம் நிகழ்ச்சிகளை நடத்த அம்மாநில அரசு தடை விதித்டுள்ளது.
இந்தநிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்துக்கு வரும் 31- ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் வரும் 31-ம் தேதி உள்ளூர் விடுமுறை- மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி!#Onam2020 | #Chennai pic.twitter.com/uG9DhNSM0X
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) August 27, 2020
அதில் அவர், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 31- ம் தேதி திங்கள்கிழமை சென்னை மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என தெரிவித்த அவர், அந்த விடுமுறைக்கு பதில், செப்டம்பர் மாதம் 12- ம் தேதி சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணிநாளாக அறிவிக்கப்படுகிறதாக தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஆகஸ்ட் 31-ம் தேதி கோவை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.