தஞ்சை மாவட்டத்துக்கு 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
தியாகராஜரின் ஆராதனை விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்துக்கு 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
தஞ்சை மாவட்டத்துக்கு வரும் 11-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார். தியாகராஜரின் 176-ஆவது ஆராதனை விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்துக்கு 11-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கலைஞர்களுக்கு சேர்ந்து இசைத்து அஞ்சலி செலுத்தும் பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் இசைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. எனவே, தஞ்சை மாவட்டத்தில் 11-ஆம் தேதி விடுமுறை ஈடுசெய்ய 21-ஆம் தேதி மாற்று வேலை நாளாக செயல்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.