கொசு கடிப்பதற்கு முன் அது உள்ளாட்சித்துறை பணி, கொசு கடித்த பிறகு அது சுகாதாரத்துறை பணி என்று நான் கூறிய கருத்தில் தவறில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், மர்ம காய்ச்சல் என எதுவும் இல்லை. காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து எந்த காய்ச்சல் என கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் 210 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதுவரை டெங்குவால் யாரும் உயிரிழக்கவில்லை.டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் குறைவு.
அரசு மருத்துவமனைகளில் எந்த நேரத்திலும், யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் . அனைத்து மருத்துவமனைகளிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.கொசு கடிப்பதற்கு முன் அது உள்ளாட்சித்துறை பணி, கொசு கடித்த பிறகு அது சுகாதாரத்துறை பணி. எனவே உள்ளாட்சித்துறையும், சுகாதாரத்துறையும் சேர்ந்து டெங்கு தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது என கூறினேன்.நான் கூறிய கருத்தில் தவறில்லையே? என்றும் மனசாட்சி இல்லாமல் ஸ்டாலின் பேசுவது கண்டனத்திற்குரியது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…