உள்ளாட்சி தேர்தல் – பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு!
உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வரும் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் வாக்குப்பதிவு தினத்தன்று பொது விடுமுறை அளிக்கப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை செயலர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், 9 மாவட்டங்களில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் இதர 28 மாவட்டங்களில் நடக்க இருக்கும் தற்செயல் தேர்தல் நடைப்பெறும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதியில் பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!#tngovt #LocalBodyElection #governmentholidays pic.twitter.com/8PA4BjGWgF
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) October 4, 2021