உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலரட்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு!
உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர திமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.
இதுதொடர்பாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உள்ளாட்சிலும் நல்லாட்சி மலரட்டும் என உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்ட மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் வாக்களித்ததுபோல், உள்ளாட்சி தேர்தலிலும் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 505 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. இதில் 202 வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. மக்களுக்காகவே சிந்திக்கிறோம், மக்களுக்காகவே செயல்படுகிறோம். மக்களுக்காக எந்நாளும் உழைப்போம், நமக்கான நல்லதொரு தமிழ்நாட்டை அமைப்போம் என்றும் கூறியுள்ளார்.
முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து நாள்தோறும் மக்களுக்காக உழைத்து வருகிறேன். தேர்தலில் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம் என்றும் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என தெரிவித்தார்.
ஆனால், ஆட்சிக்கு வந்து 4 மாதத்தில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றின அரசு, இந்தியாவிலேயே திமுக அரசாகத்தான் இருக்க முடியும். விவேகமும், பொறுப்புணர்வும், அக்கறையும் கொண்ட அரசு திமுக அரசு. இத்தகைய விவேகமும், பொறுப்புணர்வும், அக்கறையும் கொண்ட அரசு திமுக அரசுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இன்னும் ஏரளமான திட்டங்களை கொண்டுவர இருக்கிறோம். அதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். எவ்வளவு பெரிய திட்டங்களை நாங்கள் தீட்டினாலும், அதில் பெரும்பான்மையாக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தான் மக்களை வந்து சேரும். தடை ஏதும் இல்லாமல் எல்லா திட்டங்களும் மக்களிடம் சேருவதற்கு வழிவகை செய்வதாக மக்களின் வாக்குகள் அமையும் என குறிப்பிட்டார்.