உள்ளாட்சி தேர்தல் – இன்று முதல் திமுகவில் விருப்பமனு
திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்பமனு இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெறும் என்று தகவல் வெளியாகி வருகிறது.இதற்கு ஏற்ற வகையில் ஆளுங்கட்சியான அதிமுக விருப்பமனு பெரும் தேதியை அறிவித்தது.
இதனை தொடர்ந்து தற்போது திமுகவும் விருப்பமனுவை பெற்றுக்கொள்ள தேதியை அறிவித்துள்ளது.அதன்படி இன்று காலை 10 மணி முதல் வருகின்ற 20 ஆம் தேதி மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை மாவட்ட அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.