விரைவில் உள்ளாட்சி தேர்தல் – மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நடத்தப்படமாட்டாது!

Published by
பாலா கலியமூர்த்தி

விடுபட்ட மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று உள்ளாட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்.

தமிழக சட்டபேரவை கூட்டத்தொடரில் உள்ளாட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பு வாசிக்கப்பட்டது. அதில், புதிதான உருவான மற்றும் பிரிவினைக்கு உள்ளான 9 மாவட்டங்களுக்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்ட பிறகு நாகை மாவட்டம் பிரிக்கப்பட்டது என்றும் இதனால் தற்போது மயிலாடுதுறை மாவட்டத்துக்கு தனியாக தேர்தல் நடத்தப்படமாட்டாது எனவும் கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த 2019ல் நடத்தி முடிக்கப்பட்டது.

செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, மாநில தேர்தல் ஆணையத்திற்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து, விடுபட்ட ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…

9 minutes ago

6 முறை சாட்டையடி., திமுகவை அகற்ற வேண்டும்., அண்ணாமலை போராட்டம்!

கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…

18 minutes ago

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு : இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘கருப்பு பேட்ஜ்’ அஞ்சலி!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…

2 hours ago

LIVE: மன்மோகன் சிங் மறைவு முதல்… அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் வரை!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…

2 hours ago

மன்மோகன் சிங் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்! மோடி முதல் ஸ்டாலின் வரை…

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…

3 hours ago

மன்மோகன் சிங் மறைவு – 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! இறுதிச்சடங்கு எப்போது?

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…

3 hours ago