#Breaking:உள்ளாட்சி தேர்தல் உறுதி – ஆளுநர்..!
16-ஆவது புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
16-ஆவது புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.அதன்படி,முதலாவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.
அந்த உரையில்,”கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்ததும் தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் உறுதியாக நடத்தப்படும்,மேலும்,9 மாவட்டங்களில் நடத்தப்படாமல் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்”, என்று தெரிவித்தார்.