உள்ளாட்சி தேர்தல் டிசம்பரில் நடத்தப்படும் – ராஜேந்திர பாலாஜி
உறுதியாக டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016முதல் 3 வருடங்களாக நடைபெறாமல் உள்ளது. உள்ளாட்சி வார்டுகள் வரையறை அமைக்க கால தாமதம் ஆனதால், தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது காரணம் கூறப்பட்டு வந்தது.இது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,உறுதியாக டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.உள்ளாட்சியிலும் அதிமுக நல்லாட்சி தரும்.தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்று தெரிவித்தார்.