செப்.15க்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் – ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன்

Default Image

செப்டம்பர் 15ம் தேதிக்குள் மீதமுள்ள பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு.

தமிழகத்தில் ஊரகம், நகர்ப்புறம் என 2 வகையான உள்ளாட்சி அமைப்புகளும், அவற்றில் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பதவிகளும் உள்ளன. தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, மீதமுள்ள மாவட்டங்களுக்கு 2019 டிசம்பரில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் 2020 ஜனவரியில் பொறுப்பேற்றனர்.

வார்டு வரையறை பணிகள் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. மீதமுள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் மட்டுமின்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்லையும் செப்டம்பர் 15க்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தேர்தலுக்கான பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்த துவங்கியுள்ளது.

தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் செய்து வருகிறது. இந்த நிலையில், செப்டம்பர் 15ம் தேதிக்குள் மீதமுள்ள பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் உரிய நேரத்தில் தேர்தலை நடத்தவில்லை என குற்றசாட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்