உள்ளாட்சி தேர்தல் ! அதிமுகவிடம் இருந்து கணிசமான இடங்களை கட்டாயம் பெறுவோம்- பிரேமலதா விஜயகாந்த்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அதிமுகவிடம் இருந்து கணிசமான இடங்களை கட்டாயம் கேட்டு பெறுவோம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் நிறுவனத்தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.இதன் பின்னர் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக போட்டியிட, அதிமுகவிடம் இருந்து பெற வேண்டிய இடங்கள் குறித்து பேச ஒரு குழு அமைக்கப்பட உள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அதிமுகவிடம் இருந்து கணிசமான இடங்களை கட்டாயம் கேட்டு பெறுவோம். முதல்வரும் கட்டாயம் தருவோம் என உறுதி அளித்துள்ளார்.எந்த கட்சியாக இருந்தாலும் தொண்டர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025