உள்ளாட்சி தேர்தல் : நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு

Default Image
  • தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
  • உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. .இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.டிசம்பர் 17 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.டிசம்பர் 19 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் ஆகும் .வாக்கு எண்ணிக்கை 2020 -ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறுகிறது.அரசியல் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பில்,  உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்