உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு நேரம் 7 to 7 இருக்கக்கூடாது – ஜெயக்குமார்

Published by
பாலா கலியமூர்த்தி

உள்ளாட்சி வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் 6மணிக்குள் முடிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாகப் உருவாக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநிலத் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தியது. மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிகுமார, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில், திமுக சார்பாக கிரிராஜன், சட்டப்பேரவை உறுப்பினர் சுந்தர், அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எம்எல்ஏ மனோஜ்பாண்டியன், பாஜக சார்பாக கராத்தே தியாகராஜன், பால் கனகராஜ், இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பாக ஆறுமுக நயினார், சங்கர் கலந்துகொண்டனர்.

மேலும், தேமுதிக சார்பாக துணை பொதுச் செயலாளர் பார்த்தசாரதி, வழங்கறிஞர் பாலாஜி உள்ளிட்ட 11 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். உள்ளாட்சித் தேர்தலை எப்போது நடத்தலாம், வழிகாட்டு நெறிமுறைகள் திருப்திகரமாக இருந்ததா அல்லது வேறு ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா என்பது குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், ஆலோசனை முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வாக்குப்பதிவு நேரம் எந்த சூழலிலும், காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தான் இருக்க வேண்டும் என்றும் வாக்குப்பதிவு நேரத்தை 6 மணிக்கும் முடிக்க வேணும் எனவும் வலியுறுத்தியுள்ளோம்.

அதுக்கு மேல் 7 மணியில் இருந்து 7 மணிவரை இருக்க கூடாது. இதனை திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார். இதுபோன்று  வாக்கு எண்ணும் மையத்திற்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு, சிசிடிவி கேமரா உள்ளிட்ட போதிய பாதுகாப்பை ஏற்படுத்த வலியுறுத்தியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, திமுக சார்பாக பங்கேற்க கிரிராஜன் பேசுகையில், கொரோனா சூழ்நிலையை தவிர்ப்பதற்கு அதிகளவில் வாக்குச்சாவடிகள் உருவாக்கி வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் பல்வேறு பதற்றமான வாக்குச்சாவடி இருக்கும் பகுதியில் தகுந்த பாதுகாப்பு அளிப்பதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

15 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

15 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

15 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

16 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

16 hours ago