உள்ளாட்சித் தேர்தல் – நாளை 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு
- தமிழக ஊரக – உள்ளாட்சித் தேர்தலுக்கான 2ம் கட்ட பிரசாரம் நிறைவு பெற்றுள்ளது.
- நாளை ( 30-ஆம் தேதி) 2-ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி முதற்கட்ட தேர்தல் தேர்தல் 27 ஆம் தேதியும் ,2-ஆம் கட்ட தேர்தல் 30 ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் அனைத்தும் நடைபெற்று முடிந்தது.இதனை தொடர்ந்து முதற்கட்ட தேர்தல் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது.காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.
வாக்குப்பதிவு முடிந்த பின் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.இந்த முதற் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 76.19 % வாக்குகள் பதிவாகி உள்ளது என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது
2-ஆம் கட்ட தேர்தல் 30 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நேற்றுடன் ( 28 ஆம் தேதி) பரப்புரை ஓய்ந்தது.இதனையடுத்து நாளை ( 30-ஆம் தேதி) 2-ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.தேர்தல் பரப்புரை முடிவுக்கு வந்தபின் உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர்கள் அல்லாத நபர்கள் வெளியேற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. விதியைமீறி வெளியேறாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.