தமிழகத்தில் புதிதாக மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி முதல் கட்டமாக கடந்த 27-ஆம் தேதியும் இரண்டாம் கட்டமாக கடந்த 30-ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்றது .இதில் கட்சி அடிப்படை இல்லாமல் ஊராட்சி மன்ற உறுப்பினர் ,ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்,மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு கட்சி அடிப்படையிலும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் காலியாக உள்ள 91,975 பதவி இடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.இந்த காலியிடங்களில் முதல்கட்டமாக 45,336 பதவி இடங்களுக்கான தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது.
கடந்த 30-ஆம் தேதி 46,639 பதவி இடங்களுக்கான 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஓட்டுப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை ‘சீல்’ வைக்கப்பட்டது .மேலும் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நாளை ஊரக உள்ளாட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…