தமிழகத்தில் புதிதாக மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி முதல் கட்டமாக கடந்த 27-ஆம் தேதியும் இரண்டாம் கட்டமாக கடந்த 30-ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்றது .இதில் கட்சி அடிப்படை இல்லாமல் ஊராட்சி மன்ற உறுப்பினர் ,ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்,மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு கட்சி அடிப்படையிலும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் காலியாக உள்ள 91,975 பதவி இடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.இந்த காலியிடங்களில் முதல்கட்டமாக 45,336 பதவி இடங்களுக்கான தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது.
கடந்த 30-ஆம் தேதி 46,639 பதவி இடங்களுக்கான 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஓட்டுப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை ‘சீல்’ வைக்கப்பட்டது .மேலும் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.இன்று ஊரக உள்ளாட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இன்று காலை 8 மணிக்கு மொத்தம் 315 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் செய்துள்ளது.வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…