உள்ளாட்சித் தேர்தல் : இன்று வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள்
- தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
- இன்று வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் ஆகும்.
மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.அந்த அறிவிப்பில்,ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 2,98,335 பேர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் – 2,06,657 கிராம ஊராட்சி தலைவர் – 54,747, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் –32,939,மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் – 3992வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் கடந்த 16 ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது.மேலும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது .இன்று (டிசம்பர் 19 ஆம் தேதி )வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் ஆகும்.ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.