உள்ளாட்சி தேர்தல் – அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்கிய மாநில தேர்தல் ஆணையம்!

உள்ளாட்சி தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டது.
இந்த நிலையில், 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் டிடிவின் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னத்தை மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. குக்கர் சின்னம் கோரி டிடிவி தினகரன் மனு அளித்த நிலையில், தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.