உள்ளாட்சித் தேர்தல் : இதுவரை 1,09,778 வேட்பு மனுக்கள் தாக்கல்

- தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
- கடந்த 9 ஆம் தேதி முதல் நேற்று வரை 1,09,778 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது.புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் மாநகராட்சி,பேரூராட்சி,நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் நடைபெறவில்லை.இதற்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படுகிறது.கடந்த 9 தேதி முதல் தொடங்கி ஊரக உள்ளாட்சிகளுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.
கடந்த 9 ஆம் தேதி முதல் நேற்று வரை 1,09,778 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் – 75170, கிராம ஊராட்சி தலைவர் – 26245, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் –7659 ,மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் – 704 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் டிசம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. டிசம்பர் 17 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.டிசம்பர் 19 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் ஆகும்.அடுத்த ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025