உள்ளாட்சித் தேர்தல் – செல்போன் கொண்டு செல்ல தடை
- ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
- வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.எனவே தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.இதற்கு இடையில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதில்,வாக்குச் சாவடிகளில் தேர்தல் அலுவலர்கள் கட்டளையிடுவதற்கு ஏற்ப போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் .வாக்காளர்களை ஒழுங்குபடுத்தி வாக்குச்சாவடிக்குள் அனுப்புவது போலீசாரின் முக்கிய கடமை ஆகும்.
மாற்றுத்திறனாளி வாக்காளர்களையும், பிறர் உதவியின்றி நடமாட இயலாத நலிவுற்ற வாக்காளர்களையும், வரிசையில் நிற்க விடாமல் முதலில் சென்று வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.வாக்குச்சாவடிக்குள் எவரையும் புகைப்பிடிக்க அனுமதிக்கக்கூடாது .குறிப்பாக வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் செஃல்பி மற்றும் வீடியோ எடுக்க அனுமதிக்கக்கூடாது.இதனை தடுக்க செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.