உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் 26-ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் 26-ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்ய மாநில, மண்டல நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இதனிடையே, தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த 2019ல் நடத்தி முடிக்கப்பட்டது.
செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, மாநில தேர்தல் ஆணையத்திற்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து, விடுபட்ட ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில கூட வெற்றி பெறாத நிலையில், தற்போது உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…