உள்ளாட்சித் தேர்தல் பட்டியல் வெளியீடு – 2,31,890 பேர் போட்டி
- ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
- உள்ளாட்சி தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்நிலையில் வேட்பாளர்களுக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 27 மாவட்டங்களில் 3,02,994 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளது.மொத்தமுள்ள 91,975 பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 48,891 வேட்புமனுக்கள் திரும்பப்பெறப்பட்டது.18570 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் களத்தில் 2,31,890 வேட்பாளர்கள் உள்ளனர்.இவர்களில் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 1,70,898 பெரும், ஊராட்சித் தலைவர் பதவிக்கு 35,611 பேரும் போட்டியிடுகின்றனர்.ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 22 ,776 பேரும், மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 2,605 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.