உள்ளாட்சி தேர்தல் : மநீம நிர்வாகிகளுடன் கமலஹாசன் ஆலோசனை…!

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், உள்ளாட்சி தேர்தல் குறித்து, மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த 2019ல் நடத்தி முடிக்கப்பட்டது.
இந்நிலையில், செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, மாநில தேர்தல் ஆணையத்திற்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், உள்ளாட்சி தேர்தல் குறித்து, மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 20 பெண் நிர்வாகிகள் உட்பட 60 பேர் கலந்து கொண்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025