டிசம்பரில் உள்ளாட்சி தேர்தல் – மாநில தேர்தல் ஆணையம்
டிசம்பர் 2-ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் சுமார் 3 வருடங்களுக்கு மேலாக நடைபெறாமல் உள்ளது.இதனையடுத்தது தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அப்பொழுது தமிழகத்தில் அக்டோபர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து தமிழக அரசு தரப்பில் தேர்தல் நடத்த அவகாசம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.இதேபோல் தேர்தலை நடத்தக்கோரி திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது ,டிசம்பர் 2-ஆம் வாரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.இதற்கு திமுக தரப்பில் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இறுதியாக உச்சநீதிமன்றம் தேர்தல் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு ,அடுத்த மாதம் 13-ஆம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. மேலும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் டிசம்பர் 2-ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பானை வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.