உள்ளாட்சித் தேர்தல் : எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது ?
- இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.
- 2-ம் கட்ட தேர்தலில் 61.45 % வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்பட 10 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி காலியாக உள்ள 91,975 பதவி இடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.இந்த காலியிடங்களில் முதல்கட்டமாக 45,336 பதவி இடங்களுக்கான தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில் இன்று 46,639 பதவி இடங்களுக்கான 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. 2-ம் கட்ட தேர்தலில் 3 மணி நிலவரப்படி 61.45 % வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது