உள்ளாட்சி தேர்தல்;நாளை முதற்கட்ட வாக்குப் பதிவு..!
நாளை(அக்.6) உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 9 9 மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இதன்காரணமாக,தேர்தலில் வேட்பாளர்கள் கொட்டும் மழையையும், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டனர். இதனையடுத்து, முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று 5 மணியுடன் நிறைவு பெற்றது.
இந்நிலையில்,அக்.6 ஆம் தேதியான நாளை உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.இதற்காக,தேர்தல் நடைபெறும் பகுதிகள் மற்றும் வாக்குச்சாவடிகளில் 17,130 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், முதற்கட்ட தேர்தல் நடக்கும் பகுதிகளில் 6-ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்கள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலும் 24,417 பதவிகளுக்கு 80,819 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.