உள்ளாட்சித் தேர்தல் – திமுக சார்பில் மீண்டும் மீண்டும் புகார்

- ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
- உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக திமுக சார்பாக புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் நேற்று காலை 8 மணி முதல் தற்போது வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.வாக்கு எண்ணிக்கைக்கு இடையில் முறைகேடு நடப்பதாக திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.ஆனால் மாவட்ட வாரியாக புகார் கொடுத்த நிலையில் இதன் பின்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியை சந்தித்து இரண்டு முறை புகார் அளித்தார்.
இவரை தொடந்து இன்று தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியை சந்தித்து, தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்காமல் உடனே அறிவிக்க கோரி வலியுறுத்தினார்.இவரை போலவே இன்று திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளித்தார்.அதவாது தேர்தல் முடிவை உடனே வெளியிடக்கோரி கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக திமுக சார்பாக மொத்தம் 4 முறை தேர்தல் ஆணையரிடம் மட்டும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!
March 6, 2025
SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025