உள்ளாட்சித் தேர்தல் : துணை முதலமைச்சர் தம்பி,மைத்துனர் விருப்ப மனு
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி மற்றும் மைத்துனர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.இதனையொட்டி அதிமுக சார்பில் விருப்பமனு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தேனி உள்ளாட்சி தேர்தலில் அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ராஜா விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.மேலும் பெரியகுளம் நகராட்சி தலைவர் பதவிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மைத்துனர் சந்திரசேகர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.