உள்ளாட்சி தேர்தல் : முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
- தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
- உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் பழனிசாமி.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் டிசம்பர் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. டிசம்பர் 17 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.டிசம்பர் 19 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் ஆகும் .அடுத்த ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்கு இடையில் இன்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் சார்பாக தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில்,2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் பழனிசாமி.சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் வைத்து இந்த கூட்டம் நடைபெறுகிறது.