உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது – தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்.
தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக,தேர்தல் நடைபெறும் பகுதிகள் மற்றும் வாக்குச்சாவடிகளில் 17,130 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காலை மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையம், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், எந்த அசம்பாவிதமும் இன்றி தேர்தல் நடைபெற்று வருவதாகவும் தகவல் அளித்துள்ளது.