உள்ளாட்சி தேர்தல்: நாளை முதல் விருப்பமனு விஜயகாந்த் அறிவிப்பு..!
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்னும் தேர்தலுக்கான தேதி அறிவிக்கபடவில்லை.இருப்பினும் அனைத்து கட்சிகளும் விருப்ப மனுக்களை விநியோகம் செய்து வருகிறது.அதன் படி நாளை முதல் தேமுதிக விருப்பமனு பெறலாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்து உள்ளார்.
மேலும் பூர்த்திசெய்யப்பட்ட விருப்பமனுக்களை வருகின்ற 25-ம் தேதி தேமுதிக மாவட்ட தலைமை கழக அலுவலகத்தில் கொடுக்கவேண்டும் என கூறினார்.விருப்பமனு பெற மேயர் பதவிக்கு ரூ.15,000மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.4,000 கட்டணம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன் அதிமுக .திமுக கட்சிகள் விருப்பமனுக்கள் பெற அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.