#BREAKING: உள்ளாட்சி தேர்தல் -அதிமுக ஆலோசனை தொடங்கியது..!

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக இன்றும், நாளையும் ஆலோசனை நடத்துகிறது.
தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில், விடுபட்ட மாவட்டங்களில் வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக இன்றும், நாளையும் ஆலோசனை நடத்துகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெறுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் ஏற்படும் குறித்து விவாதித்த பின் எஸ்.பி.வேலுமணி விவகாரம் தொடர்பாக ஆலோசணை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025