அதிமுக – பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று காலை 11 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் செப்டம்பா் மாதம் 15 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபா் 6, 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனால், அனைத்து கட்சியினரும் தீவிரமாக வேட்பாளர் அறிவிப்பது, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஆகியவற்றை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக – பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று காலை 11 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
வேட்புமனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. வரும் 22-ந் தேதி வரை மாலை 5 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…
ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…