உள்ளாட்சித் தேர்தல் – 6 நாட்களில் மொத்தம் 1,65,659 வேட்புமனுக்கள்

Default Image
  • ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 
  • கடந்த 6 நாட்களாக  1,65,659 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது.மாநகராட்சி,பேரூராட்சி,நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் நடைபெறவில்லை.இதற்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.கடந்த 9 தேதி  முதல் தொடங்கி  ஊரக உள்ளாட்சிகளுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று  வருகிறது.

 

கடந்த 9 ஆம் தேதி முதல் நேற்று வரை 1,65,659 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் – 1,15,814, கிராம ஊராட்சி தலைவர் – 35,464, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் –13,117 ,மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் – 1264  வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல்  நாளை (டிசம்பர் 16 ஆம் தேதி )வரை நடைபெறுகிறது. டிசம்பர் 17 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.டிசம்பர் 19 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் ஆகும்.அடுத்த ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்