உள்ளாட்சித் தேர்தல் : அமமுக-விற்கு பொது சின்னம் ஒதுக்கீடு
- ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
- உள்ளாட்சி தேர்தலில் அமமுக –விற்கு பொது சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தல்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை.ஆனால் இதற்கு இடையில் அமமுகவில் உள்ள முக்கிய உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகினாரகள்.ஏற்கனவே தேர்தல் தோல்வி ஒரு புறம் அமமுகவை துரத்த மறுபுறம் முக்கிய நிர்வாகிகள் விலகல் அமமுகவை துரத்தியது.இதன் விளைவுகளால் சமீபத்தில் நடைபெற்ற நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் தினகரனின் கட்சி போட்டியிடவில்லை.இதற்கு விளக்கமாக அங்கீகாரம் பெற்ற கட்சி, சின்னம் கிடைத்த பின்புதான் தேர்தலில் அமமுக போட்டியிடும் என்று அமமுக சார்பாக தெரிவிக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமமுக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனிடையே தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் அமமுக விற்கு பொது சின்னம் வழங்கப்படுவதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.