தமிழகத்தில் டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் டிசம்பர் 30 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது .ஆனால் மாநகராட்சி,நகராட்சி ,பேருராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.தேர்தல் இரண்டுகட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில் வாக்குசீட்டு முறைதான் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏற்கனவே இந்த தேர்தலுக்கு வாக்குச்சீட்டு முறை பயன்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.அதன்படி பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டுகள் குறித்த விவரத்தை காண்போம். வெள்ளை நிற வாக்குச்சீட்டு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும்.இளம் சிவப்பு நிற வாக்குச்சீட்டு கிராம ஊராட்சி தலைவர்கள் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும். பச்சை நிற வாக்குச்சீட்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும். மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்து.கட்சி சார்பற்ற தேர்தலான ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக்கு வேட்பாளர் பெயர், ஓட்டு சீட்டில் இடம் பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…