நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாத தமிழக மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில்,வழக்கினை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் டிசம்பர் 30 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஆனால் மாநகராட்சி,நகராட்சி ,பேருராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது .
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாத தமிழக மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கறிஞர் ஜெய் சுகின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். மேலும் அவரது மனுவில், உச்சநீதிமன்ற உத்தரவை முழுமையாக பின்பற்றாதது நீதிமன்ற அவமதிப்பு என தெரிவிக்கப்பட்டது.இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே,நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…