இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி மடல் எழுதியுள்ளார்.அவரது மடலில், மக்களின் நம்பிக்கைக்குரிய பேரியக்கம் எந்நாளும் தி.மு.கழகமே என்பதை மீண்டும் ஒரு முறை மெய்ப்பித்துள்ளது, ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள். தி.மு.க.வைப் பொறுத்தவரை, ஜனநாயகத்தின் வேர்கள் காய்ந்துவிடக் கூடாது என்பதனால், உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்துங்கள், முறையாக நடத்துங்கள் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தியது.
உள்ளாட்சியில் இன்று மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, நாளை தமிழகத்தில் அமையப்போகும் நல்லாட்சிக்கான முன்னோட்டம். மக்கள் தீர்ப்பினால் அதிர்ச்சியடைந்துள்ள ஆளுந்தரப்பு மாநகராட்சி-நகராட்சி-பேரூராட்சி தேர்தல்களை நடத்துவதில் என்னென்ன தகிடுதத்தங்களை நடத்தப்போகிறது, எப்படியெல்லாம் தாமதப்படுத்தப் போகிறது என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். எத்தனை மோசடிகள் செய்தாலும், மக்களை ஏமாற்ற முடியாது. தி.மு.கழகத்தின் வெற்றியைத் தடுத்திட முடியாது என்பதை ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்திவிட்டன என்று தெரிவித்துள்ளார்.
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…
சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…
அமெரிக்கா : அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப்பு…