உள்ளாட்சித் தேர்தல் ! சின்னம் ஒதுக்குவது தொடர்பான அரசாணை வெளியீடு
உள்ளாட்சி தேர்தல் சின்னம் ஒதுக்குவது தொடர்பான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016முதல் 3 வருடங்களாக நடைபெறாமல் உள்ளது. உள்ளாட்சி வார்டுகள் வரையறை அமைக்க கால தாமதம் ஆனதால், தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது காரணம் கூறப்பட்டு வந்தது.இது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது உள்ளாட்சித் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு, முன்பதிவு குறித்த அரசாணை அரசிதழில் வெளியிட்டுள்ளது.