உள்ளாட்சித் தேர்தல் : இன்றுடன் ஓய்கிறது பரப்புரை

Published by
Venu
  • தமிழகத்தில் 2-ஆம் கட்ட தேர்தல் வருகின்ற  30 ஆம் தேதி நடைபெறுகிறது.
  • இதற்கான பரப்புரை  இன்றுடன் ஓய்கிறது.

தமிழகத்தில்  ஊரக உள்ளாட்சிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல்  ஆணையம் அறிவித்தது.அதன்படி முதற்கட்ட தேர்தல் தேர்தல் 27 ஆம் தேதியும் ,2-ஆம் கட்ட தேர்தல் 30 ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் அனைத்தும் நடைபெற்று முடிந்தது.இதனை தொடர்ந்து முதற்கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.

வாக்குப்பதிவு முடிந்த பின் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.இந்த முதற் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 76.19 % வாக்குகள் பதிவாகி உள்ளது என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

2-ஆம் கட்ட தேர்தல் 30 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்றுடன் ( 28 ஆம் தேதி) பரப்புரை ஓய்கிறது.தேர்தல் பரப்புரை முடிவுக்கு வந்தபின் உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர்கள் அல்லாத நபர்கள் வெளியேற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விதியைமீறி வெளியேறாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Recent Posts

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…

28 minutes ago

பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…

1 hour ago

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

2 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

4 hours ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

4 hours ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

5 hours ago