உள்ளாட்சித் தேர்தல் : 24 மணி நேரமும் கண்காணிக்க முதன்முறையாக பறக்கும் படை
- ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.
- தமிழக உள்ளாட்சித் தேர்தலைக் கண்காணிக்க முதன்முறையாக பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தில் 3 வருடங்களுக்கு மேலாக நடைபெறாமல் இருந்தது.இதன் பின்னர் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி ஊராக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.ஆனால் அதில் மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக பறக்கும் படை அமைத்தது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்.முதன்மை பொறுப்பு அலுவலர், காவல்துறையினரைக் கொண்ட பறக்கும்படை கண்காணிப்பு பணியில் ஈடுப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் பறக்கும் படை ஈடுபடும்.பதட்டம் நிறைந்த வாக்குச் சாவடிகளில், மத்திய அரசு ஊழியர்கள் நியமிக்கப்படுவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.