தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த கோரி கடந்த 3 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் அக்டோபர் மாதம் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டுமென ஜூலை மாதம் உத்தரவு விட்டது.
ஆனால் மாநில தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றதால் அதை காரணமாக காட்டி மேலும் நான்கு வாரம் அவகாசம் கேட்டனர். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி தீபக் குப்தா தலைமையில் அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி நீதிமன்றத்தில் டிசம்பர் முதல் வாரம் குறிப்பாக இரண்டாம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அறிவிப்பை வெளியிட முயற்சி மேற்கொண்டிருக்கிறோம் என கூறினார்.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி நாளை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் அறிவிப்புக்கான பணிகள் முடிவடைந்ததால் நாளையில் இருந்து வாரத்திற்குள் கண்டிப்பாக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…