உள்ளாட்சி தேர்தல் -கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!
உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் போன்ற கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 28-ம் தேதி தொடக்கம் எனவும் வாக்கு எண்ணிக்கை 22-ஆம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் பின்பற்ற வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
- அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்.
- அதிக கூட்டம் சேர்க்க தடை.
- அனைத்து அலுவலங்களுக்கு முன்பாக கிருமி நாசினி இருக்க வேண்டும்.
- அனைத்து மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்.
- முடிந்த வரைவில் தேர்தல் அதிகாரிகளுக்கு இணையதளம் மூலம் பயிற்சி அளிக்க வேண்டும்.
- வீடு வீடாக பிரச்சாரம் செய்ய 3 பேருக்கு மட்டும் அனுமதி.
- விதிளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை.
- அறிகுறி உள்ளவர்கள் மாலை 5 மணி முதல் 6 வரை வாக்களிக்கலாம்.